ADDED : மார் 26, 2025 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவரம்:சோழவரம் அடுத்த காந்தி நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக, 'லக்கேஜ் பேக்' ஒன்றுடன் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார்.
அந்த நபரை விசாரிக்க செல்லும்போது, கையில் வைத்திருந்த லக்கேஜ் பேக்கை கீழே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். போலீசார் அந்த பேக்கை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 3.50 லட்சம் ரூபாய்.
இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.