/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவண்ணாமலைக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
திருவண்ணாமலைக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 03, 2025 05:59 AM
திருத்தணி: திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தீப திருவிழாவை காண்பதற்கு திருத்தணியில் இருந்து, 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா, 10 நாட்கள் நடந்து வருகிறது.
நடப்பாண்டில் கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா துவங்கியது. நேற்று மாலை பரணி தீபம் ஏற்றபட்டது. இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் எதிரே உள்ள, 2,688 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழா காண வருவதால்,
பக்தர்கள் வசதிக்காக, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் திருத்தணியில் இருந்து நேற்று காலை முதல் இன்று மாலை வரை, 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என, திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

