/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : டிச 03, 2025 05:59 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே அடுத்தடுத்த நான்கு வீடுகளில் 2.5 சவரன் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நுாருமா, 42. இவர், குடும்பத்துடன் நேற்று முன்தினம் தன் உறவினர் திருமணத்திற்காக ஆந்திரா சென்றார்.
அவரது வீட்டின் அருகே வசிக்கும் அலி, 25; புடா, 40; ஜாகீர், 51 உ ள்ளிட்டவர்களும் வீட்டை பூட்டி விட்டு வேலை நிமித்தமாக வெளியில் சென்றனர்.
இரண்டு நாட்களாக நான்கு பேரின் வீடுகள் பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டன ர்.
இதில், நுாருமா வீட்டு பீரோவில் இருந்த 2.5 சவரன் நகை 10,000 ரூபாய், புடா வீட்டில் இருந்த வெள்ளி கொலுசை திருடி சென்றுள்ளனர்.
மற்ற இருவரின் வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே இரவில், அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

