sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு!: பிரபலங்களை வைத்து அதிகரிக்க திட்டம்

/

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு!: பிரபலங்களை வைத்து அதிகரிக்க திட்டம்

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு!: பிரபலங்களை வைத்து அதிகரிக்க திட்டம்

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு!: பிரபலங்களை வைத்து அதிகரிக்க திட்டம்


ADDED : மார் 25, 2024 06:18 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், நேற்று ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தன.

அந்தந்த சட்டசபை தொகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி


ஓட்டுச்சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிகள், ஓட்டு பதிவு எந்திரம் கையாளுவது குறித்து மண்டல தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்த பயிற்சி வகுப்பில் தாசில்தார் பிரீத்தி, தேர்தல் துணை வட்டாட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாதிரி ஓட்டுச்சாவடி, பயிற்சி வழங்கும் அறைகள், தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கும் பிரிவு, உணவு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

பொன்னேரி சட்டசபை தொகுதி, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்களான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

இங்கு, 55 அறைகளில், பயிற்சியாளர்களால், 2108 பேருக்கு, ஒளிப்பதிவு காட்சிகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த, பொன்னேரி தாசில்தார் மதிவாணன், நகராட்சி கமிஷனர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகளில், 3,594 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கான பயிற்சி திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரி மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரியில் வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தீபா தலைமையில் நடந்தது.

தேர்தல் பணி


இதில், திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல், துணை தாசில்தார்கள் உட்பட, 50 அலுவலர்கள் பயிற்சி கூட்டத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என பயிற்சி அளித்தனர்.

நுாறு சதவீதம் ஓட்டுப் போடுவதை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் கூடும் இடங்களிலும், கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்த இடங்களில், வீடு, வீடாகச் சென்று அனைவரும் ஓட்டுப்போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

நுாதனமான தேர்தல்


திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில், மகளிர் குழு மற்றும் பெண்களுக்கு, கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில், தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதை வலியுறுத்தி, பெண்கள் கோலம் வரைந்திருந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் சுபாஷினி ஆகியோர் பார்வையிட்டு, சிறந்த கோலங்களுக்கு பரிசு வழங்கி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளில், 16 ஆயிரத்து 224 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் ஓட்டு பதிவை அதிகரிக்கும் விதமாக, மிகவும் பிரபலமான நபர் ஒருவரை தேர்தல் விழிப்புணர்வு பிரசார துாதுவராக அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

அதன் வாயிலாக, நுாதனமான தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு அதிக அளவிலான வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் குழு -

திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், ஓட்டுப் பதிவை அதிகரிக்க, பிரபலமான நபர் ஒருவரை தேர்தல் விழிப்புணர்வு பிரசார துாதுவராக அறிமுகம் செய்ய இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us