/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவர்கள் 100 பேர் சிலம்பம் சுற்றி சாதனை
/
பள்ளி மாணவர்கள் 100 பேர் சிலம்பம் சுற்றி சாதனை
ADDED : அக் 14, 2025 12:18 AM
சென்னை, : ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில், இளைஞர்களை புகையிலை மற்றும் போதைப்பழக்கத்திலிருந்தும், இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கில் 'கலாம் உலக சாதனை நிகழ்ச்சி' நடத்தப்பட்டது.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் 'ஆபிசர்ஸ் கிளப்' வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்த இந்நிகழ்ச்சியில் 60 பள்ளி மாணவியர், 40 மாணவர்கள் என மொத்தம் 100 பேர் பங்கேற்றனர். காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி, மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், வேல் கம்பு, ஒற்றை வாள், இரட்டை வாள், மான் கொம்பு, ஈட்டி, பொய்க்கால் குதிரை என, 10 விதமான சிலம்பக் கலைகளை தொடர்ந்து 10 மணி நேரம் மாணவர்கள் இடைவிடாமல் சுற்றி அசத்தினர்.