/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,000 ஆண்டுகள் பழமையான கொள்ளம்மாகுளம் படுமோசம்
/
1,000 ஆண்டுகள் பழமையான கொள்ளம்மாகுளம் படுமோசம்
ADDED : மே 18, 2025 03:28 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில், கொள்ளம்மாகுளம் அமைந்துள்ளது. 1,௦00 ஆண்டுகள் பழமையான இந்த குளம் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள், இக்குளத்து நீரையே சமையல் மற்றும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மாற்று குடிநீர் வசதியாக, வீடுகளுக்கு குழாய் அமைத்து கொடுத்தும், இந்த குளத்தின் நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் குளத்தின் ஒருபகுதி படிகள் சரிந்து விழுந்தது. இருந்தும் மக்கள் இந்த குளத்து நீரையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, குளத்தின் படிகள் தொடர்ந்து சரிந்து விழுந்து வருவதால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, 1,௦00 ஆண்டுகள் பழமையான குடிநீர் குளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.