/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு
/
ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு
ADDED : டிச 10, 2024 01:06 AM
குன்றத்துார், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 28; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி அர்ச்சனா, 25. இவர்களது குழந்தை துவார சேந்த்.
வரும் 20ம் தேதி, குழந்தைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட இருந்தனர்.
இதற்காக, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க, நந்தகுமார் மனைவி குழந்தையுடன் நேற்று ஆட்டோவில் சென்றார்.
வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே மலையம்பாக்கம் பகுதியை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் கவிழ்ந்தது. இதில் மூவரும் காயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
நந்தகுமார், அர்ச்சனா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

