/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு
/
கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு
கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு
கேசாவரம் அணைக்கட்டில் கூவம் ஆற்றுக்கு 115 கன அடி நீர் திறப்பு
ADDED : டிச 13, 2024 02:37 AM

கடம்பத்துார்:வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என, இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர்,கூவம் ஆறாக மாறி, பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் பெஞ்சால் புயல் மற்றும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி 50 கன அடி நீர் வெளியேறி வருவதால் கொசஸதலை ஆற்றில் மழைநீர் வழிந்தோடுகிறது.
இதேபோல அணைக்கட்டின் மற்றொருபுறம் அமைக்கப்பட்டுள்ள 16 ஷட்டர்களில் 5 ஷட்டர்கள் மூலம் 115 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என நீர்வளத் ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.