/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
117 கிலோ போதைப்பாக்குகள் பறிமுதல்
/
117 கிலோ போதைப்பாக்குகள் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2025 09:03 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலை வழியாக தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் பட்டரைபெரும்புதுார் டோல் பிளாசா பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இன்னாவோ காரை நிறுத்தி சோதனை செய்த போது ஆந்திராவில் இருந்து போதைப்பாக்குகள் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து காரையும் அதிலிருந்து 1,824 பாக்கெட் கூல் லிப், தலா 1,500 பாக்கெட் விமல், வி.1, 1,320 பாக்கெட் எம்.கோல்டு ,960, பாக்கெட் ஆர்.எம்.டி., 300 கிராம் மிக்ஸ்ட் புகையிலை என 117 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் காரில் வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த மகிபால் சிங், 30 மற்றும் திருவள்ளூரில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்காராம், 38 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.