/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூரில் 117 ஏரிகள் நிரம்பின
/
வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூரில் 117 ஏரிகள் நிரம்பின
வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூரில் 117 ஏரிகள் நிரம்பின
வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூரில் 117 ஏரிகள் நிரம்பின
ADDED : அக் 29, 2025 08:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, 117 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 15ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், 'மோந்தா' புயல் காரணமாக, நேற்று முன்தினம் நாள் முழுதும் தொடர்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 574 ஏரிகளில், 117 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன. நிரம்பிய ஏரிகள் சிலவற்றில் இருந்து, உபரி நீர் வெளியேறி வருகிறது.
மேலும், 82 ஏரிகள் 75 சதவீதமும், 187 ஏரிகள் 50 சதவீதமும், 158 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 25 சதவீதத்திற்குள் 38 ஏரிகள் நிரம்பியுள்ளன.
இதுதவிர, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில், 60 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள், 25 சதவீதம் நிரம்பியுள்ளன.

