/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,250 குடிநீர் தொட்டிகள் சேதம் அச்சத்தில் 14 ஒன்றிய குடியிருப்புவாசிகள் அச்சத்தில் 14 ஒன்றிய குடியிருப்புவாசிகள்

ADDED : டிச 26, 2024 03:32 AM

கடம்பத்துார் : திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப 10,000 லிட்டர் முதல், அதிகபட்சமாக 2 லட்சம் லிட்டர் வரை, 4,200 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையான பராமரிப்பு இல்லாததால், 1,250 குடிநீர் தொட்டிகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது பகுதிவாசிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல், குடிநீர் வழங்கப்படுவதால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுதும், 'ஜல்ஜீவன்' குடிநீர் திட்டத்தில், 18 லட்சம் ரூபாய் முதல், ஊராட்சியில் தகுதிக்கேற்ப 800க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மோசமான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அகற்றவும், 'ஜல்ஜீவன்' குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள் குறித்து, 'ஜல்ஜீவன்' குடிநீர் திட்டத்தில் கணக்கெடுத்து புதிய குடிநீர் தொட்டிகள் கட்டி உள்ளோம்.
பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை விரைவில் அகற்றி, புதிய குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.