/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புது 'காஸ்' இணைப்புகளுக்கு 14.2 கிலோ சிலிண்டர் மறுப்பு?
/
புது 'காஸ்' இணைப்புகளுக்கு 14.2 கிலோ சிலிண்டர் மறுப்பு?
புது 'காஸ்' இணைப்புகளுக்கு 14.2 கிலோ சிலிண்டர் மறுப்பு?
புது 'காஸ்' இணைப்புகளுக்கு 14.2 கிலோ சிலிண்டர் மறுப்பு?
ADDED : மார் 19, 2024 08:53 PM
'இந்தியன் ஆயில்' நிறுவனம் சார்பில் புது 'காஸ்' இணைப்பு வழங்கும்போது, வீடுகளுக்கு 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறு தேவைகளுக்காக 'காம்போசிட்' என்ற சிலிண்டர் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது, 'பாலிமர் பைபர் கிளாஸ்' கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த வகை சிலிண்டர், 10 மற்றும் 5 கிலோ எடைகளில் கிடைக்கிறது. பழைய சிலிண்டர், 30 கிலோ எடை கொண்டது. புதிய வகை காம்போசிட் சிலிண்டர் அதில் பாதி எடை கொண்டதாக உள்ளது. பெண்கள் எளிதாக கையாளும் வகையில் உள்ளன.
சென்னை, புறநகரில் இந்த வகை சிலிண்டர்களை அதிகம் விற்பனை செய்யும் நோக்கத்தில், புதிய இணைப்பு பெறுபவர்களுக்கு 'காம்போசிட்' வகை முதல் சிலிண்டர் 10 கிலோ, இரண்டாவது சிலிண்டர் 5 கிலோ மட்டுமே வலுக்கட்டாயமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனுடன் லைட்டர், ஏப்ரான், டிராலி ஆகியவை சேர்த்து வாங்க வேண்டும் எனவும், கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
குடும்ப எண்ணிக்கை அதிகம் உள்ளவர்களுக்கு இந்த வகை சிலிண்டர், அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
இது குறித்து விசாரிக்கையில், 'ஐ.ஓ.சி., மேலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, வினியோகிஸ்தர்கள் 'காம்போசிட்' வகை சிலிண்டர்கள் மட்டுமே விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்' எனக் கூறப்படுகிறது.
- -நமது நிருபர்- -

