/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழகத்திற்கு 1.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
/
தமிழகத்திற்கு 1.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
தமிழகத்திற்கு 1.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
தமிழகத்திற்கு 1.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
ADDED : டிச 01, 2024 12:17 AM

ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் கடந்த, 1983ம் ஆண்டு தமிழக-ஆந்திர அரசுகள் இடையே தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வாயிலாக, தமிழகத்திற்கு தர வேண்டும். இதன்படி தற்போது தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 312.6கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை, 1.54டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி நிலவரம்
பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 290 கன அடி, மழைநீர் 390 கன அடி என மொத்தம், 680கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், .557டி.எம்.சி., நீர் உள்ளது.
நீர்மட்டம், 35 அடி. தற்போது, 22.84அடி. இங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 100 கன அடி நீர் திறக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
பிச்சாட்டூர் ஏரி
ஆந்திர மாநிலம், நகரி அருகே தோன்றும் ஆரணி ஆற்று நீரை பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதன் கொள்ளளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் இதன் முக்கிய நீர் ஆதாரம்.
வங்க கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக நேற்று காலை முதல் தமிழக, ஆந்திர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பிச்சாட்டூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரிக்கு வினாடிக்கு, 1,900 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று மதியம், 2:00 மணி நிலவரப்படி, மழைநீர் வினாடிக்கு, 1,900 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில், 1.043 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 24.50 அடி. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இதன் நீர்மட்டம் உயரும் என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.