/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் அத்துமீறிய 15 வயது சிறுவன் கைது
/
பெண்ணிடம் அத்துமீறிய 15 வயது சிறுவன் கைது
ADDED : நவ 22, 2025 02:09 AM
புழல்: புழலில், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டார்.
புழல், லட்சுமிபுரம், செக்ரட்டரியேட் காலனியை சேர்ந்த, 23 வயது பெண், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, தனியார் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுவன், திடீரென அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து, அப்பெண் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, சிறுவனை பிடித்தனர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட சிறுவன், இதேபோல் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறார் சிறையில் அடைத்தனர்.

