ADDED : ஜன 30, 2026 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெற்றோருடன் துாங்கி கொண்டு இருந்த, 15 வயது சிறுமி மாயமானார்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் தனாசிங்ஜானி, 38. தன் மனைவி முல்லாபட்டி ஜானி மற்றும் 15 வயது மகள் ஆகியோருடன் வெங்கல் அருகே சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டு இருந்த, 15 வயது மகளை காணவில்லை.
இதுகுறித்து அவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன, சிறுமி கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

