ADDED : ஜன 30, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
பொதட்டூர்பேட்டை: மது போதையில் பகுதி மக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பொதட்டூர்பேட்டை, ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார், 52. இவர் நேற்று, மது போதையில் பகுதி மக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனால், ரங்கநாதன் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.
