/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,860 வழக்குகளில் ரூ.16 கோடி தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,860 வழக்குகளில் ரூ.16 கோடி தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,860 வழக்குகளில் ரூ.16 கோடி தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,860 வழக்குகளில் ரூ.16 கோடி தீர்வு
ADDED : டிச 15, 2024 12:51 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் லோக் அதலாத் நேற்று நடந்தது.
இதில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
மாவட்டம் முழுதும் மொத்தம் 7 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
திருவள்ளூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜூலியட்புஷ்பா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிகழச்சியில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.கபீர், மகளீர் நீதிமன்ற நீதிபதி ரேவதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி கலைப்பொன்னி,சிறப்பு மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மக்கள் நீதிமன்ற நீதிபதிரமேஷ், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, சிறப்பு சார்பு நீதிமன்ற தீனதயாளன் பங்கேற்றனர்.
மேலும், சிறப்பு சார்பு நீதிமன்ற மற்றும் நிலம் கையகப்படுத்துதல் நீதிபதி சதீஷ்குமார் மூத்த உரிமையியல் நீதிபதி நளினிதேவி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஷோபாதேவி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் செல்வஅரசி,பவித்ரா, ராஜேஷ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மொத்தம் 4,860 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 16 கோடியே, 65 லட்சத்து, 71,485 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.