/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1.71 லட்சம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசி
/
1.71 லட்சம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசி
ADDED : நவ 28, 2024 12:57 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள், செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் வளர்ந்து வருகின்றனர். இந்த ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கால்நடை துறையின் வாயிலாக, ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும்.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான தடுப்பூசி, கடந்த 11ம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக கால்நடை துறை உதவி மருத்துவர்கள் தலைமையில் ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் வாயிலாக கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கால்நடை துறை பொறுப்பு இணை இயக்குனர், எஸ்.தாமோதரன் கூறியதாவது:
மாவட்டத்தில் மொத்தம், 2 லட்சத்து, 40,500 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு தடுப்பூசி போடப் பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை, 1 லட்சத்து 71,100 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆடுகளுக்கு வரும் டிச.10ம் தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.