/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,711 விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு
/
1,711 விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு
1,711 விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு
1,711 விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு
ADDED : செப் 27, 2025 11:08 PM
திருவள்ளுர்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், நடப்பு காரீப் பருவத்தில், 1,711 விவசாயிகள், 5,478 ஏக்கர் பரப்பளவில் காப்பீடு செய்துள்ளனர்.
திருவள்ளுர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில், நடப்பு 2025 - -26ம் ஆண்டு காரீப் பருவ நெல், ரபி மற்றும் இதர பயிர்களுக்கு, 1,711 விவசாயிகள், 5,478 ஏக்கர் பரப்பளவில் காப்பீடு செய்துள்ளனர்.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 92 இயந்திரங்கள் மானியத்தில் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 86 இயந்திரங்கள் மானியத்தில் விநியோகிக்க உத்தரவு வழங்கப்பட்டு, 85 லட்சம் ரூபாய் மதிப்பில் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இலவசமாக 16 ஆழ்துளை கிணறு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை 13 கிணறுகள், 30.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.