/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோடா பாட்டில்களை வீசி வாலிபரை கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை
/
சோடா பாட்டில்களை வீசி வாலிபரை கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை
சோடா பாட்டில்களை வீசி வாலிபரை கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை
சோடா பாட்டில்களை வீசி வாலிபரை கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை
ADDED : ஆக 10, 2025 12:30 AM
திருத்தணி:சாலையில் நடந்து சென்ற வாலிபர் மீது பாட்டில்களை வீசி கொலை செய்ய முயன்ற இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 31. இவர், நேற்று முன்தினம் காசிநாதபுரம் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு, தனது நண்பர்களுடன் சென்றார். இரவு 10:00 மணிக்கு, திருத்தணி - சித்துார் சாலையில், சதீஷ் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, முன்விரோதம் காரணமாக, திருத்தணி நேரு நகரைச் சேர்ந்த சந்துரு, 22, புருஷோத்தமன், 25, ஆகிய இருவரும், திடீரென சதீஷை வழிமறித்து தகராறு செய்தனர். பின், ஆத்திரமடைந்த சந்துரு, புருஷோத்தமன் ஆகியோர், மறைத்து வைத்திருந்த சோடா பாட்டில்களை வீசி, சதீஷை கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால், அருகே இருந்த ஒரு கடைக்குள் நுழைந்த சதீஷ், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
இதனால், சாலையில் விழுந்த பாட்டில்கள் வெடித்து சிதறின. அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து ஓடினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை பார்த்ததும், சந்துரு, புருஷோத்தமன் ஆகியோர் தப்பினர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு, புருஷோத்தமனை தேடி வருகின்றனர்.