/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல், மணல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
/
கல், மணல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
ADDED : பிப் 07, 2025 09:54 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே, கல் மற்றும் மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட கனிம வள துணை தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள், நேற்றுமுன்தினம், கலெக்டர் அலுவலகம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை தணிக்கை செய்த போது, அரசின் அனுமதி ரசீது இன்றி, கள்ளத்தனமாக கற்கள் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதே போல, திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம், பெரிய மஞ்சகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரக்கோணத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அரசு அனுமதியின்றி, திருப்பத்துார் மாவட்ட ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் சேலம் கார்த்திக், 36 மற்றும் உரிமையாளர் தர்மபுரி சிவகுமார், 40 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.