ADDED : அக் 14, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : பென்னலுார்பேட்டை அருகே, சதுரங்கப்பேட்டை கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பென்னலுார்பேட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்தனர்.
அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, ஹான்ஸ், 55 பாக்கெட்டுகள் இருந்தன. இதன் எடை, 20 கிலோ. இதன் மதிப்பு 2,500 ரூபாய். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து கடையின் உரிமையாளர் குருசாமியை, 52 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.