/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
200 கிலோ குட்கா பறிமுதல் பூந்தமல்லியில் 4 பேர் கைது
/
200 கிலோ குட்கா பறிமுதல் பூந்தமல்லியில் 4 பேர் கைது
200 கிலோ குட்கா பறிமுதல் பூந்தமல்லியில் 4 பேர் கைது
200 கிலோ குட்கா பறிமுதல் பூந்தமல்லியில் 4 பேர் கைது
ADDED : ஜூலை 28, 2025 03:07 AM

பூந்தமல்லி:பூந்தமல்லியில், 200 கிலோ குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே, பூந்தமல்லி போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே சென்ற, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட 'ஸ்கோடா' காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் 22 மூட்டைகளில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
காரில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்குமார், 25, சரவணசிங், 23, கோதாசிங், 23, ராமாராம், 21, என்பது தெரிய வந்தது.
இவர்கள், பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.