/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
/
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
ADDED : டிச 03, 2024 09:10 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் ஆரணி ஆற்றின் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ளது ஏரி. இதன் மொத்த கொள்ளளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் இதன் முக்கிய நீர் ஆதாரம். மழை பெய்வதற்கு முன் ஒரு டி.எம்.சி., நீர் இருந்தது.
'பெஞ்சல்' புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் வரத்து ஏற்பட்டது. வினாடிக்கு, 5,400 கன அடி வீதம் தண்ணீர் வந்ததால், ஏரியின் பாதுகாப்பை கருதி, அங்குள்ள மதகு வாயிலாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
நேற்று, மதியம் 2:00 மணி நிலவரப்படி, மழைநீர் வினாடிக்கு, 2,800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய கொள்ளளவு, 1.657 டி.எம்.சி., நீர்மட்டம், 29.60 அடி. இங்குள்ள மதகு வாயிலாக வினாடிக்கு, 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.