/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் 'சோலார் பேனல்' அமைக்க காஞ்சியில் 20,000 பேர் விண்ணப்பம்
/
வீட்டில் 'சோலார் பேனல்' அமைக்க காஞ்சியில் 20,000 பேர் விண்ணப்பம்
வீட்டில் 'சோலார் பேனல்' அமைக்க காஞ்சியில் 20,000 பேர் விண்ணப்பம்
வீட்டில் 'சோலார் பேனல்' அமைக்க காஞ்சியில் 20,000 பேர் விண்ணப்பம்
ADDED : மார் 13, 2024 11:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் இரண்டு தலைமை தபால் நிலையங்கள், 55 துணை அஞ்சலகங்கள், 272 கிளை தபால் நிலையங்கள் என, 392 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு, சேமிப்பு உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக வீடுகளில் சோலார் பேனல் அமைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளது. அந்த வகையில், உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து, வீட்டிற்கு உபயோகப்படுத்தலாம்.
உபரி மின்சாரத்தை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலமாகவும் தனி வருவாய் ஈட்ட முடியும். இதில், வீட்டு உரிமையாளர்களுக்கு, 300 யூனிட் வரையில் 'இலவச மின்சாரம்' என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தில் இணைய விரும்புவோரின் விபரங்களை சேகரிக்க, தபால் துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு, 30,000 வீடுகளுக்கு சோலார் பேனல்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரம் நேற்று வரையில், 20,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:
வீடுகளில், சோலார் பேனல்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இது குறித்து, பொதுமக்களிடையே வீடியோ மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம்.
இதன் மூலமாக, 20,000 வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில், நிர்ணயம் செய்த இலக்கை தாண்டி, கூடுதல் சோலார் பேனல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

