ADDED : பிப் 04, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர்:ஆவடி அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. தனியார் நிறுவன ஊழியர்.
இவர், கடந்த 2ம் தேதி மாலை, குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம், அவரது வீடு திறந்து கிடப்பதாகவும், மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரது மாமனார் கிருஷ்ணன் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 21 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.