/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
ADDED : ஆக 13, 2025 11:14 PM
ஊத்துக்கோட்டை:பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது, 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., ஆகும். நீர்மட்டம், 35 அடி. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக பெறப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் முக்கிய நீர் ஆதாரம்.
கடந்த மே மாதம், 22ம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் சாய்கங்கை கால்வாய் வாயிலாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வருகிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 360 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.
தற்போதைய கொள்ளளவு, 2.1 டி.எம்.சி., நீர்மட்டம், 31.80 அடி. அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 250 கன அடி நீர் சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது.