ADDED : செப் 21, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
வடக்கு கடற்கரை, செப். 22–
கடற்கரை ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த, 225 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நேற்று காலை 11:00 மணியளவில், ரயில்வே போலீசார், புறநகர் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நடைமேடை 2ல், கேட்பாரற்று கிடந்த, 225 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். பின், அரிசி மூட்டைகளை, சென்னை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
