UPDATED : செப் 21, 2026 05:59 PM
ADDED : செப் 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு:சிவன் கோவிலுக்குள் நுழைந்து, உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளது பார்வதி சமேத சங்கமேஸ்வரர் கோவில். நேற்று காலை, கோவிலை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர், காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அர்த்த மண்டபத்தின் ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தது.
அதன்பின், பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்படி அங்கு விரைந்த போலீசார், கோவிலுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
