/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எடை குறைந்த 2,262 குழந்தைகளுக்கு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை
/
எடை குறைந்த 2,262 குழந்தைகளுக்கு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை
எடை குறைந்த 2,262 குழந்தைகளுக்கு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை
எடை குறைந்த 2,262 குழந்தைகளுக்கு திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : நவ 23, 2025 02:59 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், நடப்பாண்டில் 2,262 பேர் பயனடைந்துள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, குறைந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் துவங்கி, குறைந்த எடை, தொற்று நோய், மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளிட்ட குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிறந்தது முதல் 28 நாட் கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கு, இந்த பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக தனி கட்டடத்தில், 24 மணி நேரமும் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு, செயற்கை சுவாச கருவி, மஞ்சள் காமாலைக்கான ஒளிக்கதிர் சிகிச்சை, ரத்த மாற்றம், நுரையீரல் விரிவடைவதற்கான திரவ மேற்பரப்பு சிகிச்சை, கங்காரு முறை தாய் - சேய் கவனிப்பு, உயர்தர எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்படுகிறது.
மேலும், செவி மற்றும் விழித்திறன் பரிசோதனை, இதய எதிரொலி கண்டறிதல், நுண்கதிர் படம் எடுத்தல் போன்ற நவீன சிகிச்சை வசதியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, அருகில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நடப்பாண்டில் இதுவரை, 2,262 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ரேவதி கூறியதாவது:
கடந்த 2010ம் ஆண்டு, பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின், இப்பிரிவு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் தலைமையில், இரண்டு துணை பேராசிரியர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், குறைந்த எடையில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்தாண்டு, 2,472 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை, 2,262 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவற்றில், 2,076 பேர் நலமுடன், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

