/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
23 கிலோ கஞ்சா பறிமுதல்: சோழவரத்தில் மூவர் கைது
/
23 கிலோ கஞ்சா பறிமுதல்: சோழவரத்தில் மூவர் கைது
ADDED : நவ 14, 2025 10:42 PM

மீஞ்சூர்: சோழவரம் பகுதியில் 3.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சோழவரம் மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில், வாகன தணிக் கையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், சிவகங்கையைச் சேர்ந்த அமரன் சூர்யா, 28, துாத்துக்குடியைச் சேர்ந்த பாலாஜி, 26 மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூவலிங்கம், 29, என, தெரிந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், 3.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

