/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில கிக் பாக்சிங் முகாம் வேலுாரில் 231 பேர் பயிற்சி
/
மாநில கிக் பாக்சிங் முகாம் வேலுாரில் 231 பேர் பயிற்சி
மாநில கிக் பாக்சிங் முகாம் வேலுாரில் 231 பேர் பயிற்சி
மாநில கிக் பாக்சிங் முகாம் வேலுாரில் 231 பேர் பயிற்சி
ADDED : ஜூன் 02, 2025 11:28 PM

சென்னை தமிழக மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மேலக்கோட்டையூரில் கடந்த மாதம், மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் நடந்தன.
அதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. காஞ்சிபுரம் இரண்டாமிடத்தையும், திருவள்ளூர் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
அவர்களுக்கான மாநில பயிற்சி முகாம், நேற்று முன்தினம் வேலுாரில் துவங்கியது. முகாமில், சென்னையை சேர்ந்த 46 பேர் உட்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 231 பேர் பங்கேற்று, பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும், முகாமில் தேர்வாகும் 50 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் நடக்கும், சீனியர் மற்றும் மாஸ்டர்களுக்கான தேசிய கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.