/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
11 நாட்களில் 24 சவரன் திருட்டு 15 மொபைல்போன்கள் பறிப்பு பீதியில் மக்கள்; போலீசார் அலட்சியம்
/
11 நாட்களில் 24 சவரன் திருட்டு 15 மொபைல்போன்கள் பறிப்பு பீதியில் மக்கள்; போலீசார் அலட்சியம்
11 நாட்களில் 24 சவரன் திருட்டு 15 மொபைல்போன்கள் பறிப்பு பீதியில் மக்கள்; போலீசார் அலட்சியம்
11 நாட்களில் 24 சவரன் திருட்டு 15 மொபைல்போன்கள் பறிப்பு பீதியில் மக்கள்; போலீசார் அலட்சியம்
ADDED : செப் 10, 2025 09:44 PM
திருத்தணி:திருத்தணியில் மட்டும் 11 நாட்களில், 24 சவரன் தங்க செயின்கள், 15 மொபைல்போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளது. திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருத்தணி நகரத்தில் சில நாட்களாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பெண்களை குறிவைத்து மர்மநபர்கள் நுாதன முறையில் தங்க நகைகளையும், மொபைல்போன்களையும் பறித்து செல்கின்றனர்.
கடந்த 11 நாட்களில் மட்டும் பெண்களிடம் 24 சவரன் தங்க செயின் மற்றும் 15 மொபைல்போன்களை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.
↓கடந்த ஆக., 29ம் தேதி திருத்தணி பேருந்து நிலையத்தில், மத்துாரைச் சேர்ந்த தனலட்சுமி, 60 என்பவர், பொதட்டூர்பேட்டை செல்ல அரசு பேருந்தில் ஏறிய போது, அவரது கழுத்தில் இருந்த, 4 சவரன் தங்கசெயின் பறிப்பு
↓ஆக., 31ல், திருத்தணி காந்தி நகரைச் சேர்ந்த பிரியா, 43, என்பவர், அரசு பேருந்தில் சோளிங்கர் பகுதியில் இருந்து திருத்தணி ரயில் நிலையத்திற்கு சென்றபோது, அவரது கைப்பையில் இருந்த 6.5 சவரன் தங்க செயின் திருடுபோனது
↓கடந்த 7ம் தேதி, திருத்தணி ஜோதிசாமி தெருவில் உள்ள நகைக்கடையில் இருந்த பெண் ஊழியரிடம், மர்ம நபர் நகைகளை பார்ப்பது போல், 7 சவரன் தங்கசெயின் திருட்டு
↓நேற்று முன்தினம், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த மோகனா, 33 என்பவர், திருத்தணி தனியார் விடுதியில் தங்கியிருந்த போது, மர்மநபர் ஒருவர், பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக கூறி, மோகனாவின் கைப்பையில் இருந்த, 6.5 சவரன் தங்க செயினை திருடிச் சென்றார்.
இதுதவிர, திருத்தணி - அரக்கோணம் சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியர் உள்ளிட்ட 15 பேரின் மொபைல்போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். தொடர் திருட்டால், திருத்தணி நகர மக்கள் கடும் பீதியடைந்து உள்ளனர்.
எனவே, மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, திருட்டு சம்பவங்களை தடுத்து, மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.