ADDED : நவ 21, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, . திருத்தணியில் உள்ள பழைய சென்னை சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன், 50. இவர், ரயில் நிலையம் அருகே உள்ள கரீம்பேடு பகுதியில், பேக்கரி கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திறந்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டு, பணப்பெட்டியில் வைத்திருந்த, 24,000 ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதேபோல, பேக்கரி கடையின் அருகே, டீக்கடை நடத்தி வரும் பாண்டியன், 40, என்பவர், தன் கடையின்முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அதையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.