/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
245 கண்காணிப்பு கேமராக்கள் திருத்தணி நகராட்சியில் அமைப்பு
/
245 கண்காணிப்பு கேமராக்கள் திருத்தணி நகராட்சியில் அமைப்பு
245 கண்காணிப்பு கேமராக்கள் திருத்தணி நகராட்சியில் அமைப்பு
245 கண்காணிப்பு கேமராக்கள் திருத்தணி நகராட்சியில் அமைப்பு
ADDED : டிச 17, 2024 09:53 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் தற்போது, 11 இடங்களில் பூங்கா மற்றும் நடைபயிற்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சியில், அசம்பாவிதங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு, நிர்வாகம், 'நமக்கு நாமே' திட்டத்தின் வாயிலாக, ஆதிசங்கர் நகர், பாலாஜி நகர், நல்லாங்குளம், நல்லதண்ணீர் குளம், சதாசிவ லிங்கேஸ்வர் கோவில் குளம், வாரியார் நகர் உட்பட 11 பூங்காக்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், அம்மா உணவகம் என மொத்தம் 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்காக, 47.35 லட்சம் ரூபாயில் தீர்மானித்து தனியார் நிறுவனம் வாயிலாக, 245 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதாக நகராட்சி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
நகராட்சியில், மேற்கண்ட இடங்களில், மொத்தம், 245 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வாயிலாக குற்றச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்பதற்கான நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா என, ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கண்காணிப்பு கேராக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.