/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 25 பேர் 'அட்மிட்'
/
திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 25 பேர் 'அட்மிட்'
திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 25 பேர் 'அட்மிட்'
திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 25 பேர் 'அட்மிட்'
ADDED : செப் 19, 2024 11:23 PM

திருத்தணி,:திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தமாதிரி பரிசோதனைகள் செய்து வருகின்றனர். இந்த காய்ச்சல் எந்த வகையானது என, மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வந்தனர். இவர்களில், 25 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து திருத்தணி அரசு மருத்துவனைமயின் தலைமை மருத்துவர் கல்பனா கூறியதாவது:
சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகித்து, அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு நாளைக்கு மூன்று முறை ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அனைவரும் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். உடம்பின் எதிர்ப்பு சக்தி உருவாக்கி கொள்ளும் வகையில், பழச்சாறுகள் பருக வேண்டும். இரண்டு நாள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், கட்டாயம் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.