/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் நகை, பணம் திருடிய இருவரிடமிருந்து 25 சவரன் மீட்பு
/
திருத்தணியில் நகை, பணம் திருடிய இருவரிடமிருந்து 25 சவரன் மீட்பு
திருத்தணியில் நகை, பணம் திருடிய இருவரிடமிருந்து 25 சவரன் மீட்பு
திருத்தணியில் நகை, பணம் திருடிய இருவரிடமிருந்து 25 சவரன் மீட்பு
ADDED : ஜன 05, 2025 02:05 AM

திருத்தணி:திருத்தணி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 45; இவர், கடந்த வாரம் ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு, குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.
மூன்று நாட்களுக்கு முன் சுந்தரமூர்த்தி வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைத்து பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகை, 50,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதே நாளில், திருத்தணி மகளிர் காவல் நிலையம் பின்புறத்தில் வசிக்கும், ரவி, 52, சாவித்திரி, 72 ஆகியோரின் வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று உள்ளனர்.
தொடர்ந்து, கணபதி நகர் பகுதியில் வசிக்கும் மனோகரன் என்பது வீட்டின் பூட்டை உடைத்து, மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நான்கு பேரும், திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். அதன்படி, திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, மேற்கண்ட வீடுகளில் நகை, பணம் மற்றும் மின்சாதன பொருட்கள் திருடிய, சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ், 35, ஆவடி பகுதியைச் சேர்ந்த பொன்முருகன், 53, ஆகிய இருவரை கைது செய்து, திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகை திருடியதை ஒப்புக் கொண்ட அவர்கள், 25 சவரன் நகை, 50,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.