/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு
ADDED : அக் 04, 2024 08:25 PM
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பூண்டி சத்யமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 150 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, மேலும் 100 கன அடி நீர் அதிகரிக்கப்பட்டு, 250 கன அடியாக உள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, வினாடிக்கு 340 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 150 கன அடி வீதம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, 100 கன அடி அதிகரிக்கப்பட்டு, 250 கன அடியாக உயர்த்தப்பட்டது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர், 340 மற்றும் மழைநீர், 40 கன அடி என, மொத்தம் 380 கன அடி நீர் பூண்டிக்கு கொண்டிருக்கிறது.
மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், தற்போது, 0.194 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 35 அடி. தற்போது 19.33 அடியாக உள்ளது.