/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
/
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
ADDED : நவ 05, 2025 01:32 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில், பட்டாகத்தியில் கேக் வெட்டி, கையெறி பட்டாசுகளை எரிந்து, இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட நண்பர்கள் மூன்று பேரை, மணவாள நகர் போலீசார் கைது செய்தனர்.
கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி, 23, என்பவருக்கு, கடந்த 1ம் தேதி பிறந்தநாள்.
இவரது நண்பர்களான, அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற அருண்குமார், 23 கனிஷ்கர், 20, மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, மொத்தம் ஐந்து பிறந்தநாளை கொண்டாடினர்.
அப்போது, பட்டாகத்தியால் கேக் வெட்டியும், கையெறி பட்டாசுகளை கொளுத்தி அருகே உள்ள வீடுகளின் மீது எறிவது போன்ற வீடியோவை, இன்ஸ்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சிறுவர்கள் இருவரையும், பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து, காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
இதுதொடர்பாக, தமிழ்ஒளி, அருண்குமார், கனிஷ்கர் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

