ADDED : ஜூலை 05, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
சோழவரம்: சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று, சோழவரம் போலீசார் அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின்பேரில், அத்திப்பேடு பகுதியை சேர்ந்த லட்சுமி, 55, காரனோடையை சேர்ந்த கிரிஜா, 45, சோழவரத்தை சேர்ந்த சதிஷ், 44, ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதில், அங்கு, 70 பாட்டில்கள் இருந்தன. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
