மண் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
மண் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
ADDED : ஜூலை 05, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிராவல் மண் கடத்தப்படுவதாக சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று சுரங்கத்துறை அதிகாரிகள் திருப்பதி ---- சென்னை தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் திருத்தணி வழியாக திருவள்ளூர் நோக்கி கிராவல் மண் ஏற்றி வந்த மூன்று லாரிகளை, மடக்கி பிடித்தனர்.
லாரி ஓட்டுநர்கள் திருவள்ளூரை சேர்ந்த முத்து, 32, விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 27, பெரம்பலுாரைச் சேர்ந்த ரவி, 43 ஆகியோரை கைது செய்தனர்.
மூன்று லாரிகளை பறிமுதல் செய்து கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
