/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை பறிமுதல் பூந்தமல்லியில் 3 பேர் கைது
/
போதை மாத்திரை பறிமுதல் பூந்தமல்லியில் 3 பேர் கைது
ADDED : ஜூலை 13, 2025 10:37 PM
பூந்தமல்லி:பூந்தமல்லியில், ஒன்றே கால் கிலோ கஞ்சா, 1,100 போதை மாத்திரைகள் வைத்திருந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில், தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காட்டுப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அய்யப்பன், 26, கண்ணன், 26, ஷியாம் சுந்தர், 25, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒன்றே கால் கிலோ கஞ்சா, 1,100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்தனர், யாரிடம் சப்ளை செய்வதற்காக வைத்திருந்தனர் என்பது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.