/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரிவாளால் வெட்டி வழிப்பறி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
/
அரிவாளால் வெட்டி வழிப்பறி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
அரிவாளால் வெட்டி வழிப்பறி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
அரிவாளால் வெட்டி வழிப்பறி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : அக் 04, 2025 10:25 PM
பொன்னேரி:பைக்கில் வந்த மூன்று பேரை மறித்து, அரிவாளால் வெட்டி, மொபைல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பாடியநல்லுாரைச் சேர்ந்த மணிகண்டன், 25, சக்தி ஆகாஷ், 24, மற்றும் பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய் கணேஷ், 24, ஆகிய மூன்று பேரும் நண்பர்கள்.
இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் பழவேற்காடு பகுதிக்கு சென்றுவிட்டு, இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பழவேற்காடு - பொன்னேரி சாலையில் சென்றபோது, ஆண்டார்மடம் அருகே, நான்கு பேர் கொண்ட கும்பல், இவர்களை வழிமடக்கியது. அரிவாளை காட்டி, பணம் கேட்டு மிரட்டியது.
தரமறுத்த நிலையில், அரிவாளால் மூவரையும் வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்த இரண்டு மொபைல்போன்கள் மற்றும் 3,500 ரூபாயை பறித்து விட்டு தப்பியது.
மூவரு ம் தலை மற்றும் கையில் வெட்டுக்காயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின் றனர்.