/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுமுறை நாளில் மது விற்ற 3 பேர் சிக்கினர்
/
விடுமுறை நாளில் மது விற்ற 3 பேர் சிக்கினர்
ADDED : அக் 02, 2025 10:44 PM
கும்மிடிப்பூண்டி, அரசு மதுக்கடை விடுமுறை நாளில், கும்மிடிப்பூண்டி பகுதியில் கள்ளத்தனமாக சரக்கு விற்ற மூவரை கைது செய்த போலீசார், 355 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அரசு மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கும்மிடிப்பூண்டி பகுதியில், பல இடங்களில் தனியார் சிலர் கள்ளத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில், சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுண்ணாம்புகுளம் கிராமத்தில் ஜானகி, 47, மாநெல்லுார் கிராமத்தில் அப்பு, 36, தேர்வாய்கண்டிகை கிராமத்தில் மோகன், 48, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 355 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்தணி நகரத்தில் சிலர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று திருத்தணி போலீசார் திருத்தணி ஜோதிநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரளா, 56 என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
அவரிடமிருந்து, 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் சரளாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.