/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
/
கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜன 05, 2025 09:36 PM
திருத்தணி,:அரக்கோணம் அடுத்த, வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் மகன் ஓம்பிரசாத், 20; இவர், திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி, ஓம்பிரசாத் வழக்கம் போல, கல்லூரிக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு டி.புதுார் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ஓம்பிரசாத்தை வழிமறித்து மொபைல் கேட்டு, தராததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு, வாட்ச், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக, திருத்தணி போலீசார் ஓம்பிரகாசத்தை தாக்கிய அரக்கோணம் சேர்ந்த விக்ரம், 23, தென்னரசு, 23, பூவரசன், 21, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் வாதங்கள் முடிந்த நிலையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்துராஜ் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேருக்கும், 2 ஆண்டு சிறை தண்டனையும் தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.