/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 3 பள்ளிகள் பசுமை திட்டத்தில் தேர்வு
/
திருவள்ளூரில் 3 பள்ளிகள் பசுமை திட்டத்தில் தேர்வு
ADDED : ஜன 16, 2025 08:19 PM
திருவள்ளூர்:காலநிலை மாற்றத்தால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, 2024 - --25ம் ஆண்டுக்கான பசுமை பள்ளிகள் திட்டத்தில், 100 பள்ளிகளுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பசுமை பள்ளிகள் திட்டம், தமிழக அரசால் 2022ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், 2022 -- 23ம் நிதியாண்டில், 25 பள்ளிகள்; 2023 -- 24ம் நிதியாண்டில், 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டில், இத்திட்டம், 100 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 100 பள்ளிகளில் சூழல் மேம்பாட்டு பணிகளுக்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் இத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, 20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில், திருமழிசை, குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருக்கண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளி என, மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.