/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் பஸ் - வேன் மோதி 30 பேர் படுகாயம்
/
தனியார் பஸ் - வேன் மோதி 30 பேர் படுகாயம்
ADDED : செப் 28, 2025 11:36 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே தனியார் பேருந்து மற்றும் தனியார் தொழிற்சாலை வேன் மோதிய விபத்தில், 30 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து நேற்று காலை திருவள்ளூர் நோக்கி பாரதி என்ற தனியார் பேருந்து, 40 க்கும் மேற்பட்ட பயணியருடன் திருவள்ளூர் சென்றது.
ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது தனியார் பேருந்து மீது எதிரே வந்த மகேந்திரா வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த திலீப், 29, தொழிற்சாலை வேன் ஓட்டுநர் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 39, மற்றும் பேருந்து, வேனில் பயணம் செய்தனர்.
திருவலங்காடு சின்னம்மா பேட்டை கோகுல்ராஜ், 25, பொதட்டூர் பேட்டை திருமலை, 20, உமாபதி,20, காஞ்சிபுரம் தமிழ்ச்செல்வி, 42, புவனேஷ், 11, திருவள்ளூர் சிவபிரகாசம், 65, ஆந்திர மாநிலம் அய்யப்பன் நாயுடு கண்டியை சேர்ந்த பிரியங்கா, 26 உட்பட, 30 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மணவாள நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.