/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதுகலை ஆசிரியர் தேர்வு 305 பேர் 'ஆப்சென்ட்'
/
முதுகலை ஆசிரியர் தேர்வு 305 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 12, 2025 10:19 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வில், 305 பேர் பங்கேற்கவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடந்தது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 14 மையங்களில், காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்த தேர்விற்கு, 4,454 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 4,149 பேர் தேர்வு எழுதினர். 305 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவற்றில் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கும் பணியை, கல்வித் துறையினர் மேற்கொண்டனர்.