/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் 3வது வியாழன் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
திருமழிசையில் 3வது வியாழன் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருமழிசையில் 3வது வியாழன் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருமழிசையில் 3வது வியாழன் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 26, 2025 09:35 PM
திருவள்ளூர்:திருமழிசை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், பிரதி மாதம் 3வது வியாழக்கிழமை மின் நுகர் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதுகுறித்து திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின்வாரியகோட்ட பொறியாளர் அலுவலகத்தில், மாதாந்திர மின்வாரிய குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்தது.
தற்பொழுது செங்கல்பட்டு வட்டத்தில் இருந்து திருமழிசை கோட்டம் பிரிக்கப்பட்டு திருவள்ளூர் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனி வரும் நாட்களில் திருமழிசை கோட்ட அலுவலகத்தில் பிரதி மாதம் 3வது வியாழக்கிழமை, திருவள்ளூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.