/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கள்ளக்காதல் விவகாரம் கார் ஓட்டுநருக்கு வெட்டு 4 பேர் கைது
/
கள்ளக்காதல் விவகாரம் கார் ஓட்டுநருக்கு வெட்டு 4 பேர் கைது
கள்ளக்காதல் விவகாரம் கார் ஓட்டுநருக்கு வெட்டு 4 பேர் கைது
கள்ளக்காதல் விவகாரம் கார் ஓட்டுநருக்கு வெட்டு 4 பேர் கைது
ADDED : அக் 21, 2025 11:21 PM

ஆவடி: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 43; கார் ஓட்டுநர்.
இவரது வீட்டருகே, நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், பிரகாஷை வெட்டியதில் வலது, இடது கை மணிக்கட்டு, பின்பக்க கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவியுடன், பிரகாஷ் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில், மர்ம நபர்கள் அவரை வெட்டியது தெரிந்தது. இது தொடர்பாக, பழைய குற்றவாளிகள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.